Saturday, November 14, 2009

விலைமகள்கள்

தாயை ருசித்த மீசை
மகளை ருசித்த பின்பு
பேத்தியையும் ருசிக்க தயாரானது
நரையுடன்...

மனிதன் என்ற பெயர் கொண்டவர்களே

நெஞ்சு பொறுக்குதில்லை
என்றான் பாரதி
உங்களை காணும்போதெல்லாம்

எப்படித்தான் பொறுக்கிறீர்கள்
உங்களின் இந்த
அடிமை விலங்குகளை

நீங்கள் உடைத்தெறிய வேண்டாம்
நான் உடைத்தெறிகிறேன்
உடன் மட்டும் வாருங்கள்...

வைகை வற்றியதற்கு,
வருந்தாமல் மீன் பிடிப்பது
சுலபமாகிவிட்டது என்கிறீர்கள்...

உங்கள் வியாபாரச்சந்தையில்
குழந்தைக்கான தாய்பாலையும்
விற்க்கப் பார்க்கிறீர்கள்...

எனக்கு பிடித்தவை

தெருவே நாற்றமெடுத்தது
சாக்கடையால் அல்ல
சாக்கடையால் வந்த சண்டையால்...

தாமரை என்றார்
அல்லி என்றார்
தூக்கணாங்குருவிக்கூடு என்றார்
எனக்கு தெரியாதா
கண்ணீர்தேக்கும் பைகள்
என் மார்பகங்கள் என்று...

வெயிலால் பனித்துளி
வியர்த்து இருந்தது
அவள் முகம்...