Wednesday, September 29, 2010

கவிதையின் கரு


உங்கள்
கவிதையின் கரு
எதுவாகவும் இருக்கலாம்

அம்மா தந்த காப்பியாக இருக்கலாம்
அப்பா பரிசளித்த பேனாவாக இருக்கலாம்
காதலி கொடுத்த முத்தமாக இருக்கலாம்
தோழியின் செல்ல திட்டுகளாக இருக்கலாம்
நெருங்கிய நண்பனின் மரணமாக இருக்கலாம்
என்றோ பார்த்த சினிமாவாக இருக்கலாம்
புதிதாய் பூக்கும் பூவாக இருக்கலாம்
இன்னொரு கவிதையாக கூட இருக்கலாம்
இல்லை என்றால்,
இக்கவிதையில் வருவது போல் சூன்யமாகவும் இருக்கலாம்.

No comments:

Post a Comment