ஒரு இரவு
நான் தூங்க
ஆரம்பித்த பின்
நான் எழுதிய கவிதைகளேல்லாம்
என் கவிதை புத்தகத்தின் தாள்களை
விட்டு வெளியேறி என் படுக்கையறைக்கு
வந்துவிட்டன.
தனியாய் படுத்திருக்கும்
என்னை சூழ்ந்துவட்டமாய்
அமர்ந்து கொண்டு
ஏதேதோ பேச
ஆரம்பித்தன.
சின்ன சப்தம் கேட்டு
கண்விழித்து என்கவிதைகள்
என்றுணர்ந்து ஆடாமல்
பேசுவதை கவனித்தேன்.
என்னை எழுப்பிவிடக்கூடாது
என்று மிகவும்
சன்னமான குரலில்
பேச ஆரம்பித்தன
"இவன் தான் நமது கடவுளா?"
கேட்டது என் முதல் கவிதை.
"ஆமாம் ஆனால் அவனை கடவுளாக்கியது நாம்"
பதில் சொல்லியது என் முதல்கவிதைப் போட்டியில்
பரிசு வாங்கி தந்த கவிதை.
"இவன் நல்லவனா?"
இது என் 8 வயது கவிதை.
"அப்படி தான் அவன் நினைக்கிறான்"
என் 12 வயது கவிதை.
"அது உண்மையா?"
"அது இனிமேல் தான் தெரியும்?"
"எப்படி கண்டுபிடிப்பது?"
"இனிமேல் பிறக்கப்போகும் கவிதையை வைத்து தீர்மானிப்போம்"
"இவன் காதலிக்கிறானா?"
"இல்லாமல் நாங்கள் வந்திருப்போமா?"
காதல் கவிதைகள் ஒரேகுரலில் சொல்லின.
"யாரை காதலிக்கிறான்?"
"அவனுக்கே இதுவரை தெரியாது"
"நாமெல்லாம் எப்படி இவனுள் வந்தோம்?"
"இவன் தான் நமக்குள் வந்து நம்மை வெளியே இழுத்துப் போடுகிறான்".
"நாம் முழுக்க முழுக்க இவனால் செய்யப்படவில்லையா?"
"இல்லை இவனை முழுக்க செய்வதுதான் நம் வேலை"
"இவனை மட்டுமா?"
"இவன் மூலம் இவ்வையத்தையும்"
"முடியுமா?"
"முடியும் என்றுதான் இவன் நம்புகிறான்".
அப்பொழுது
நான் விழித்திருந்ததை
பார்த்த எனது
சமூக விழிப்புணர்வு கவிதை
மற்ற கவிதைகளை
கூட்டிக்கொண்டு
கவிதைப் புத்தகத்தில்
போய் ஒழிந்துகொண்டது.
அடுத்த நாள் காலையில்
என் கவிதைபுத்தகத்தில்
இந்த கவிதை எழுதப்பட்டிருந்தது.
2 comments:
கவிதை நன்றாக இருந்தது!
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
www.ellameytamil.com
Post a Comment