Monday, May 17, 2010

அகோரத்தின் அழகு


அலுவலகம் முடிந்து
வீட்டுக்கு இரவு தான்
வந்தேன்

இரவு வானத்தை
முதன் முதலாய்
வெள்ளையாய்
இருந்தது

மஞ்சள் பூசி
குளித்தது போல்
இருந்தது
நிலா

தீக்கங்குகளாய்
சிவப்பாய்
சிதறிக்கிடந்தன
நட்சத்திரங்கள்

என்,
கை கால்கள் கூட
குச்சி குச்சியாய்
இருந்தன

என்
தலை நிலாபோல்
உருண்டையாக
இருந்தது

என்
மூக்கு இருக்கும்
இடத்தில்
ஒரு கருப்புக்கோடு
இருந்தது

என்னைப் போலவே
என்கையைப் பிடித்து
நின்றிருந்த உருவத்துக்கு
மீசை போய்
பொட்டு இருந்தது
என் மனைவி

இதை எல்லாம்
கற்பனை செய்து
பார்த்தால்
அகோரமாக இருக்கும்- ஆனால்
அகோரம் அழகானது
என் குழந்தையின்
கைவண்ணத்தில் பார்த்ததால்

No comments:

Post a Comment