Monday, May 17, 2010

மீதியை நீங்களே எழுதுங்கள்


எங்கள் வீட்டில்
எல்லோரிடமும்
செல் இருக்கிறது

என்னுடயது
சோனிஎரிக்சன்
அண்ணனுடயது
நோக்கியா என்சீரியஸ்
அப்பாவிடம்
மொட்டொ ரொலொ
அம்மாவிடம்
நோக்கியா 1600
செகன்ட்கேன்ட்
இருக்கிறது

அப்பாவின் கான்டாக்ட்ஸில்
கழக தோழர்களாக
இருப்பார்கள்

அண்ணனுடையதில்
அவனது மச்சான்கள் நம்பர்கள்
இருக்கும்


என் செல்லின்
கான்டாக்ட்ஸை தோழிகளுக்கு
தாரை வார்த்துவிட்டேன்

அம்மாவின் செல்லில்
அப்பா,அண்ணன்
தாத்தா, என் நம்பர்
தவிர்த்து வேறு
எதையும் பார்த்தாய்
நினைவு இல்லை...

அப்பாவின் டயலர்டோன்
பட்டுக்கோட்டயின் பாடல்கள்
அண்ணனுடயது எப்பொழுதுமே
திருப்பாச்சி அருவாள தான்
என்னுடயது லேட்டஸ்ட்
காதல் பாடல்கள்
அம்மாவினுடயது
கிர்ர்ர்... கிர்ர்ர்...

நான்
என்ன சொல்லவருகிறேன்
என உங்களுக்குப்
புரிந்திருந்தால்
மீதி கவிதையை நீங்களே
எழுதிக் கொள்ளுங்கள்

2 comments:

Anonymous said...

simply superb..........

பாரதி கண்ணம்மா said...

மீதி கவிதை ஒற்றை வார்த்தையில்...

"அம்மா"

Post a Comment