
என்
அம்மாவுக்கு பிடித்தது
மௌனம்
மௌனத்திற்கு
பிடித்தது
என் அம்மா
அப்பா
எது சொன்னாலும்
மௌனமே அம்மாவின்
பதில்
அந்த
மௌனத்திற்கு அர்த்தம்
'சரி' என்பதே
அப்பா
வசவுகளை எய்தாலும்
அம்மா மௌனத்தையே
ஏவுவாள்
அப்பாவின்
கத்தல்கள் ஓய்ந்ததும்
மௌனம் அவளுடன் சேர்த்து
வீட்டையும் சுழ்ந்துகொள்ளும்
இந்த
மௌனம் என் பாட்டியிடம்
இருந்து வந்ததாக அறிகிறேன்
இந்த மௌனத்தை
தன் மகளான
எனக்கும் பரிசளிக்க
நினைத்திருக்கிறாள்
நானும்
மௌனத்தை
ஏற்றுக் கொள்வேன்
மௌனத்திற்கு அர்த்தம்
"நீ சொல்வது எதுவும் கேட்கவில்லை"
என்பதாகவும் இருக்கலாம்.
2 comments:
Sir romba supera irukku unga blogs nan romba late parkuren romba romba super
மௌனத்திற்கு அர்த்தம் , 'அந்த விவாதத்தை விடவும் அந்த நபர் முக்கியம் என்பதாகவும் இருக்கலாம்"
Post a Comment