Thursday, September 30, 2010

கவிதை குறித்த சொற்கள்


சிலரது கவிதைகளில்
அளவுக்கு அதிகமான
சொற்கள் குவிந்து
கழுத்தை நெரிக்கின்றன.

சிலரது கவிதைகளில்
தொடர்பில்லாத வார்த்தைகள்
வந்து அக்கவிதையை
யாருக்கும் புரியாத
பின்நவினத்துவ கவிதையாக்கும்
அபாயமும் இருக்கிறது.

இலக்கணக் கவிதையை
உருவாக்கும் முயற்சியில்
சொற்கள் கத்தரிக்கப்படும்
சோகமும் நடக்கத்தான் செய்கிறது.

சங்ககாலத்தில் இருந்து
தற்காலம் வரை
பல மாற்றங்களுக்கு
உட்பட்டு வரும்
கவிதையின் சொற்கள்
ஏனோ தான்
தாங்கிவரும் கருத்தில்
இருந்து மட்டும்
மாறவே இல்லை.

சிலர் கவிதைக்கான
சொற்களை செய்கிறார்கள்
சில சொற்கள்
கவிதை செய்கின்றன
ஆனால்
கவிதை செய்யும் சொற்களே
உண்மை கவிதையாகின்றன.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

Ungal Kootru unmaiyey...
kavithaikka ingey sorkkal kalai edukkappadukinrana.

VELU.G said...

நல்லாயிருக்குங்க உங்கள் கருத்து

Post a Comment