Saturday, October 2, 2010

அம்மாவுக்குத் தெரியும்


அப்பாவின் காதலியாய்
இருந்த என்
அம்மாவுக்கு
பரதம் ஆடத் தெரியும்.
பண் பாடத் தெரியும்
தையற்கலை தெரியும்.
கவிதை செய்யவும் தெரியும்.
கனிணி பற்றியும் தெரியும்.
இலக்கியம் படிக்கத் தெரியும்.
இலக்கணம் நடத்த தெரியும்.
பாண்டி ஆடத் தெரியும்
பாண்டியர்கள் வரலாறும் தெரியும்.
இது போல் அவளுக்கு
பல தெரியும்கள் இருக்கின்றது.
எனது அம்மாவான
அப்பாவின் காதலிக்கு
இவையனைத்தும்
தெரியும் என்பது
மட்டுமே எனக்குத் தெரியும்;
அதுவும் யாரோ சொல்லி...

2 comments:

Unknown said...

"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது

உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......

Anonymous said...

ammakkal palaperin nilamai ithuthan mahane! ithai pillaikal purinthu kollumun avarkalukku thirumanam aagi manaivi mun ammavukku onrum theriyathu enru solvarkal par...appothuthan ammakkaluku romba romba valikkum...

Post a Comment