நான் ஒரு கனவு மனிதன்.
ஒரு பரிசல் கொண்டு கடல் கடக்கும் கனவை சாகாரா பாலைவனத்தில் கொண்டிருந்தேன்.
இறுக்கி அடைத்த ஒரு இருட்டு அரையின் கதவிடுக்கு வழியே ஒழுகிவரும் ஒலிக்கற்றையாக என் கனவு வழிந்து வந்தது.
அது என் கனவல்ல.. ஒரு நூற்றாண்டுக்கான கனவு.....
என் கனவின் ஆழம் அளக்கமுயன்று நானே பல சமயம் மூழ்கி செத்திருக்கிறேன்..மீண்டும் என் கனவின் மூலமே உயிர்த்தெழுந்திருக்கிறேன்..
கீழ்வானில் இருந்து மேல்வானம் வரை அளந்து ஓடிய நெடும் மின்னல் ஒன்றை என் கனவின் முதுகெழும்பாக கொண்டிருந்தேன்.நொடியில் தோன்றி மறைந்துவிடும் என்கிற சிலரது கேளிப் பேச்சுக்களைத் தாண்டி அதை நான் ஒரு கிழவியின் கடைசி மூச்சாக பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.....
எனக்கான கனவில் என் இளமை முழுக்க இழக்கத் தயாராயிருந்தேன் ஏனென்றால் என் கனவு என் முதுமையின் முடிவில் இளமையைத் திருப்பிக் கொடுத்துவிடும் சக்தி படைத்தது....
நிரைய மழைத்துளிகளால் ஆன ஒரு கார்முகிலாய் என் கனவை என்னைப் போல் வேரொருவன் கிடைத்தால் அவன் மீதும் தூவத் தயாராய் இருக்கிறேன்..
அப்படி எவனோ தூவிவிட்டதை தான் நான் தூக்கி சுமந்து கொண்டு திரிகிறேன்.
எங்கோ, எப்பொழுதோ தொடங்கிய கனவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது....
இன்னும் இன்னும் நீளும் அது.....
இதே கனவுடன் நீங்கள் இருந்தால் நீங்கள் தான் நான்..
No comments:
Post a Comment