1.இறந்த சிறகொன்றுக்கு
உயிர் தந்து பறக்கவிடும்
காற்று- என் வீட்டு
மின்விசிறியில்
வெட்டுப்பட்டுச் சாகிறது.
2.உறைந்த நீர்
பனிக்கட்டி
பறக்கும் பனிக்கட்டி?
காற்று.
3. காற்று மட்டும்
பேசிக் கொண்டிருக்கிறது
மயான அமைதி.
4.மீன் நீரில் வாழும்
மான் நிலத்தில் வாழும்
நீரும் நிலமும் காற்றில் வாழும்.
5.சிகை கலைத்து
விளையாடும்
காதலி,காற்று.
No comments:
Post a Comment