Sunday, October 7, 2012

முத்த நொடி


உன்னை முத்தமிடவேண்டும்
போல் இருக்கிறது .
இந்த நொடியே

உன் கைகளில்
தவழும் மதுக் கோப்பையின்
கடைசித் துளியாய்
காத்திருக்க முடியாது .

உன்னை முத்தமிடவேண்டும்
போல் இருக்கிறது .
இந்த நொடியே.

முத்தமிடுவது
தவம்....
பிடித்த தோழியை
என்கையில் வரமாகி விடுகிறது.


முத்தம்,
அன்பின் வெளிப்பாடா
காமத்தின் வடிகாலா
யூதாஸ் துரோகமா
வேம்பயரின் இரத்த
உரிஞ்சளின் துவக்கமா
எனவெல்லாம் ஆராயாதே...

உன்னை முத்தமிடவேண்டும்
போல் இருக்கிறது .
இந்த நொடியே.

இந்த கவிதையை
முழுதாய் படிக்கவேண்டாம்
இந்த நொடி கடந்து விட்டால்
எண்ணம் மாறி விடலாம்.

ஆகையால்
உன்னை முத்தமிடவேண்டும்
போல் இருக்கிறது .
இந்த நொடியே.
.

No comments:

Post a Comment