தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..
நம்மை பேச
அனுமதிக்கிறான்.
நாக்கு மட்டும் அவனுடையது....
நாம் அடிமை இல்லை
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..
நாம் விரும்பிய
கல்வி கிடைக்கும்.
வேலைக்கான படிப்பை-மட்டும்
அவன் முடிவு செய்வான்...
நாம் அடிமை இல்லை....
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..
காதலிக்கு பரிசு
வாங்கலாம்.-ஆனால்
கடைக்கு அவன்தான்
சொந்தக்காரன்..
நாம் அடிமை இல்லை....
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..
இந்தக்
கவிதையை என்னால்
எழுத மட்டுமே முடியும்..
உங்களால் படிக்க
மட்டுமே முடியும்...
நாம் அடிமை இல்லை
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..

No comments:
Post a Comment