ஒருவன் இறந்து கிடந்தான்.
இறந்தவன் யார் எனக் கேட்டேன்
என் அப்பா என்றான் ஒருவன்.
இன்னொருவனிடம் கேட்டேன்
என் தங்கையின் கணவன் என்றான்.
வேறொருவனிடம் கேட்கும் போது
ஊர் பெரிய மனிதன் என்றான்.
கடங்காரன் என்றாள்
கேட்காமலேயே ஒருத்தி.
கடைசியாய்
இறந்தவனிடமே கேட்டேன்
அவன் அமைதியாக இருந்தான்.
No comments:
Post a Comment