உங்கள் உள்ளாடை
சொல்லிவிடும்.
உங்கள் அந்தரக்கத்தைக்
காப்பதையும் தாண்டி
அவையாற்றும் வினைகள் -எல்லாம்
ஜனநாயகத்தின் வரம்...
பிராண்டட் பட்டி தெரிய
உள்ளாடை அணிவது
நாகரிகத்தின் உச்சம்
ஆகிவிட்ட நொடியில்
வெளித் தெரியும்
உள்ளாடையை சுட்டுவதும்
இழிவு ஆகிவிட்டது.
கோமனத்தை
இன்னும் உள்ளாடை
என நம்பும்
மாயாண்டிக்கு கேட்காமல்
உலகமயமாக்கலுக்கு
ஒரு நன்றி
சொல்லிக் கொள்ளுங்கள்.
அப்படியே
கிழிந்த உள்ளாடையின்
மேல் அயர்ன்
பண்ணிய சட்டை போடும்
அனந்த் ராஜுக்கும்
கேட்காமலிருக்கட்டும்...
முகநூல் திறக்காத
நாளில் சிவப்பு ஜட்டியோடு
கவிதை எழுதும் கவிஞருக்கு
கேட்டால் நீங்கள் செத்தீர்கள்..
ஒரே ஒரு
ஆறுதலான
விஷயம்.
எனக்கு
உள்ளாடை அணியும்
பழக்கம் இல்லை...
No comments:
Post a Comment