Tuesday, February 26, 2013

காத்திருக்கிறேன்

உனக்காக
தேநீர் ஊற்றிவைக்கிறேன்
காத்திருத்தல் அதை
ஆற்றிவிடுகிறது..

பிறகு தேர்ந்தெடுத்த
கொட்டைகளை அரைத்து
கருப்புக் காப்பி தயாரிக்கிறேன்
உனது ஞஞ்ஞை
அதை மேலும் கசப்பாக்கிவிட்டது...

கடைசியாய் மதுவை
குவளையில் நிரப்புகிறேன்
ஆறிப்போவதற்கும்
கசந்து போவதற்கும்
அவசியமில்லாமல்
இருக்கிறது அது.

No comments:

Post a Comment