Explosive Exclusive
யாரைக் காப்பாற்ற இந்தக் கள்ள மெளனம்?
ஊரில் சாலை சரியில்லை, சாக்கடை சரியில்லை எனப் புலம்புபவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் இதை அவசியம் படிக்க வேண்டும். தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் அரசியல்வாதியைப் பார்த்து கதாநாயக அரசு அதிகாரி “ உங்க அதிகாரம் வெறும் அஞ்சு வருசம்தான் எங்க அதிகாரம் அம்பத்தெட்டு வயசு வரைக்கும்” என்று கர்வமாகச் சொல்வார். படத்தின் முடிவில் அந்த மோசமான அரசியல்வாதி ஐந்தாண்டுகளில் தேர்தலில் தோற்றுப்போவார். ஒரு மாற்றத்திற்கு அதிகாரிகள் வில்லன்களாக இருந்தால் என்ன நடக்கும்? இருபதாயிரம் கோடி ஊழல் நடக்கும். முடிவில் அவர்கள் பணிநிறைவுற்று நிம்மதியாக பென்சன் வாங்கிக் கொண்டிருப்பார்கள்.
தமிழகத்தின் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ள ஊழல்,மட்டும் 20 ஆயிரம் கோடி.. துல்லியமாகச் சொல்வதென்றால் 20,544,42,85,000. இது 2011 ஆம் ஆண்டு வரை உள்ள கணக்கு மட்டுமே. இந்த மூன்று ஆண்டுகளில் இன்னும் சில நூறு கோடிகள் சேர்ந்திருக்கலாம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.
இது அரசாங்கமே கொடுத்துள்ள கணக்கு. தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்ற தகவல் இது
இந்த இமாலய ஊழலுக்குப் பின்னிருப்பவர்கள், நீங்கள் நினைப்பது போல அரசியல்வாதிகள் அல்ல, அதிகாரிகள்!
என்ன ஊழல்? எப்படி ஊழல்?
உள்ளாட்சிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்டால் இந்த ஊழலை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்
உள்ளாட்சி மன்றங்களில் இரண்டு வகையான தீர்மானங்கள் முன்வைக்கப்படும். 1.செலவுத் தீர்மானங்கள் , 2/வரவுத் தீர்மானங்கள். தண்ணீர் தொட்டி அமைக்க பணம் வேண்டும் போன்றது செலவுத் தீர்மானங்கள். நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்களின் வாடகைகள் வசூலிக்க வேண்டும் போன்றது வரவுத் தீர்மானங்கள்.
ஒவ்வொரு செலவுத் தீர்மானமும் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு இரண்டு விஷயங்கள் ஆராயப்படும். அந்தத் திட்டம் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமா? நிதி ரீதியாக சாத்தியமா? இவ்விரண்டையும் ஆராய்வது அரசு அதிகாரிகளே. உள்ளாட்சித்துறையில் அரசு அதிகாரிகள்தான் ஒரு திட்டத்திற்கு செலவு செய்யலாமா வேண்டாமா என்கிற முடிவை எடுப்பார்கள். காசோலைடில் கையெழுத்துப் போடும் அதிகாரமும் அரசு அதிகாரிகளுக்கேத் தவிர , நகர்மன்றத் தலைவரிடமோ கவுன்சிலர்களிடமோ இருக்காது.
சரி அதிகாரிகள் நிதியைச் சரியாகச் செலவிட்டார்களா அல்லது கணக்குக் காண்பித்துவிட்டுத் தங்கள் பையில் போட்டுக் கொண்டார்களா என்பதைக் கண்காணிப்பது யார்?
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை என்று ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறை உள்ளாட்சி அமைப்புகளின் வரவு , செலவு , ஒப்பந்தங்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்யும். ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படும். அது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட வருவாய் இழப்புகளை யாரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும். இதைத் தணிக்கைத் தடை என்பர்.
உதாரணத்திற்கு விருத்தாச்சலம் நகராட்சியில் இருக்கிற 2231 தணிக்கைத்தடைகளில் ஒன்று.
ஒருவர் பொதுக் கழிப்பறையை ஒப்பந்தம் மூலம் குத்தகைக்கு எடுத்துள்ளார். அது தொடர்பாக ஏற்படும் செலவுக்கு குத்தகைதாரே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் கட்டவேண்டிய மின்கட்டணத்தை அவருக்குப் பதிலாக நகராட்சி செலுத்தியுள்ளது. 1999 ஜூன் முதல் மார்ச் 2000 வரை ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை நகராட்சி மின்கட்டணமாகச் செலுத்தியுள்ளது. இதைக் கண்டுபிடித்த நிதித் தணிக்கைத் துறை இந்த ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை ஒப்பந்தகாரரிடம் வசூலிக்க வேண்டும் என்றும் தவறினால் இந்த நிதி இழப்பிற்கு காரணமான ஆணையர் , மேலாளர், கணக்கர் போன்றோரிடம் வசூலிக்கவேண்டும் என்றும் தணிக்கையறிக்கையில் குறிப்ப்பிட்டுள்ளது.
இது போல தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத் தணிக்கைத் தடைகளை நகர் மன்றம் அல்லது மாமன்றம் அல்லது பேரூராட்சி மன்றத்தின் பார்வைக்குக் கொண்டு சென்று இரண்டு மாதங்களுக்குள் அதன்மீது நடவடிக்கை எடுத்து வருவாய் இழப்பை சரி செய்ய வேண்டியது அந்தந்த ஆணையர்களின் கடமை.
ஆனால் 1965 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகம் முழுதும் ஒரு ரூபாய் கூட, வசூலிக்கப்படவில்லை. இப்படி வசூலிக்கப்பட வேண்டிய தொகை இருபதாயிரம் கோடி!
ஏன் வசூலிக்கப்படவில்லை? சற்றுக் கூர்ந்து கவனித்தால் இந்தக் கேள்விக்கான விடை கிடைக்கும். மக்கள் வரிப்பணத்தை முறைகேடாகச் செலவிட்டவர்கள், வருமான இழப்பு ஏற்படுத்தியவர்கள் அரசு அதிகாரிகள். அவர்கள்தான் திட்டத்திற்கான நிதி தொடர்பாக முடிவு எடுத்தவர்கள். திட்டத்திற்கான செலவுகளுக்குக் காசோலையில் கையெழுத்திட்டவர்கள். இப்படிச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் அரசு அதிகாரிகள்தான். அவர்கள் தங்கள் சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதாவது ஒரு ஊழல் அதிகாரி இன்னொரு ஊழல் அதிகாரியை நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றுகிறார். ஊழல் என்பது எத்தனை பெரிய சமூகக் குற்றமோ அதற்கு நிகரானது ஊழலுக்குத் துணை போவதும்.
ஓர் உதாரணம் பார்க்கலாம்
2001 முதல் 2006 வரை விருத்தாச்சல நகர்மன்றத் தலைவராக இருந்தவர் டாக்டர் வள்ளுவன். அப்போது அவரது நகர்மன்றத்தில் தணிக்கையறிக்கை முன்வைக்கப்படுகிறது. அதில் தணிக்கைத் தடைகள் இருப்பதைக் காண்கிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி ஆணையரிடம் முறையிடுகிறார். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. 1965 ஆம் ஆண்டில் இருந்தே தணிக்கைத் தடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளும் டாக்டர் வள்ளுவன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் துணை கொண்டு விருத்தாச்சலம் நகராட்சியில் மட்டும் நிலுவையில் இருக்கும் தொகை குறித்த விபரங்களை கேட்டு ப் பெறுகிறார் 2000 ம் ஆண்டு வரை ஏழுகோடி நிலுவையில் உள்ளது என்று தகவல் கிடைக்கிறது (2011 ஆம் ஆண்டு கணக்குப்படி விருத்தாச்சலத்தில் மட்டும் வசூலிக்கப்பட வேண்டிய தொகை சுமார் ஐம்பத்தி மூன்று கோடி)
அந்தப் பணத்தை வசூலிக்கச் சொல்லி வழக்குத் தொடுக்கிறார் (வழக்கு நடந்து கொண்டிருக்கிறது) பெரிய தொழிற்சாலைகளோ, உயர்தர மருத்துவமனைகளோ , பெரிய கல்வி நிறுவனங்களோ இல்லாத ஒரு நகராட்சியில் மட்டுமே இவ்வளவு தொகை வசூலிக்கப்படாமல் இருக்கும் என்றால் மொத்தத் தமிழ்நாட்டில் எவ்வளவு இருக்கும் என்று அவருக்குக் கேள்வி எழுகிறது. முன்னாள் நீதிபதி அசோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.முருகேஷ் உள்ளிட்ட சில நண்பர்கள் அவருடன் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களைப் பெறுகிறார்கள் அந்தத் தகவல்களைக் கொண்டு முன்னாள் நீதிபதி அசோகன் தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் வசூலிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த பதிமூன்று ஆண்டுகளாக இதற்காகப் போராடிவரும் டாக்டர் வள்ளுவனிடம் பேசினோம். ”இந்த ஊழல் பற்றி முதலில் நகராட்சி ஆணையர்களிடம் முறையிட்டோம். எந்த பதிலும் இல்லை. புதிதாய் வந்த ஆணையர்கள் கூட பழைய ஆணையர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் தொடங்கி உள்துறை செயலாளர், தமிழக நிதித்துறை செயலாளர், தமிழக வருவாய்த்துறைச் செயலாளர், தமிழக உளவுத்துறை, முதலமைச்சர் தனிப்பிரிவு இன்னும் அதிகாரங்கள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்றோம். எதற்கும் எந்த பதிலும் இல்லை.. 2005 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பண்ருட்டி எம்.எல்.ஏ தி.வேல்முருகனிடம் கூறினோம். அவரும் சட்டசபையில் இது குறித்துக் கேள்வி எழுப்பினார். எந்த பதிலும் இல்லை. சட்டசபையில் பேசியும் பதில் இல்லை என்றால் ஒரு பிரஜைக்கு இந்த அரசாங்க முறையின் மேல் எப்படி நம்பிக்கை வரும்?. இந்த நிலுவையை வசூலிக்கப் போவதில்லை என்றால் எதற்காக நிதித் தணிக்கைத் துறை என்று ஒரு துறையை அரசாங்கம் வைத்து இருக்கிறது.?
செலவுத் தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு கூட நிதி இல்லை என்று எதேனும் காரணம் சொல்லலாம் வரவுத் தீர்மானத்தை நிறைவேற்றத் தயங்குவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?. அதன் பிறகுதான் நீதிமன்றத்தின்படி ஏறினோம். நீதிமன்றமும் ஏன் சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் சி.பி.ஐ இன்னும் இந்த வழக்கை கையில் எடுக்கவில்லை. கடைசி முயற்சியாக இதை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றுள்ளோம். அங்கேயாவது நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார்
தமிழகம் முழுவதும் உள்ள நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்துள்ள முன்னாள் நீதிபதி அசோகனிடம் பேசினோம்
“ இந்தியச் சட்டம் ஒரு முழுமையான சட்டம். இது போன்ற ஊழல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு சட்டத்தில் ஏற்கனவே வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அதை நடைமுறைப்படுத்தினாலே போதும். நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதைச் செய்யாமல் இருப்பதே இவ்வளவு பெரிய ஊழலுக்கு காரணம். இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேல் ஊழலில் தொடங்கி , கடமையைச் செய்ய மறுத்தல் ,அதிகார துஷ்பிரயோகம் என்று பல வழக்குகள் தொடுக்கலாம். நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை இம்மூவரில் யாராவது ஒருவர் கறாராக இந்தப் பிரச்சனையை கையாண்டு இருந்தாலே நாங்கள் பதிமூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்க மாட்டோம்” என்றார்.
அடுத்து என்ன செய்யலாம்? அவரிடமே கேட்டோம்.
“இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது கிரிமினல் வழக்குத் தொடுப்பதற்கான வேலைகளைச் செய்துவருகிறேன். ஒவ்வொரு ஊரில் உள்ளவர்களும் தங்களது நகராட்சி, மாநகராட்சியில் எவ்வளவு நிலுவை உள்ளது என்று அறிந்து, தனித்தனியாக அவர்களது ஊரில் நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்கக் கோரியும் அந்தந்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்குத் தொடரலாம். தமிழகத்தில் பல இடங்களிலும் இது போன்று வழக்குத் தொடுக்கப்படும் போது இது அதிக கவனம் பெறும். அப்படிச் செய்தால் இந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விரைவான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விரைவாக நீதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.” என்றார்.
இவர்கள் குறிப்பிடும் இருபதாயிரம் கோடி என்பதே குறைவான தொகைதான். ஏனெனில் 1990 களில் லட்சம் ரூபாய் என்றால் அதன் இன்றைய மதிப்பு என்ன? இன்று அது பல லட்சங்களைத் தாண்டும். ஆனால் இந்த அறிக்கையில் 1965 ஆம் ஆண்டில் நிலுவையில் உள்ள நூறு ரூபாய்க்கும் 2010 ல் நிலுவையில் உள்ள நூறு ரூபாய்க்கும் ஒரே மதிப்பிடப்பட்டு கணக்கிடப்பட்டிருக்கின்றன. அதேபோல் எல்லாத் தணிக்கைத் தடைப் பத்திகளிலும் பணம் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். சிலவற்றில் தெருவிளக்கு முறைகேடாக போடப்பட்டுள்ளது. அதற்கு செலவிட்ட பணத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று மட்டும் எழுதியிருப்பார்கள். தொகையைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள் இந்தப் பணம் எல்லாம் சேர்த்தால் முப்பதாயிரம் கோடிகளைத் தாண்டும்” என்றார்
இப்பணம் வசூலிக்கப்பட்டாலே நகராட்சி மாநகராட்சிக்குத் தேவையான அனைத்தையும் செய்வதற்கான நிதி கிடைத்துவிடும்.புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவையானதெல்லாம் மக்களிடமிருந்து ஒரு சிறிய செயல்.
செயல் அது ஒன்றே சிறந்த சொல்
(நன்றி: புதிய தலைமுறை)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பாக்ஸ் 1
வகை
|
எண்ணிக்கை
|
தணிக்கைத் தடை
|
தணிக்கை ஆண்டு
|
ரூபாய்
(லட்சங்களில்)
|
மாநகராட்சி
|
10
|
102598
|
டிச -2011
|
630306.41
|
நகராட்சிகள்
|
98
|
128829
|
மார்ச் 2011
|
285430.50
|
மூன்றாம் நிலை
நகராட்சிகள்
|
50
|
23355
|
மார்ச் 2011
|
43060.00
|
பஞ்சாயத்துக்கள்
|
561
|
63195
|
மார்ச் 2011
|
1095545.84
|
மொத்தம்
3,17,977 தணிக்கைத்தடைகள்
2054442.85 லட்சம்… அதாவது
20,544 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம்
ரூபாய்
--------------------------------------------------------------------------------------------------------------
பாக்ஸ் 2
உங்கள்
ஊரில் எவ்வளவு ஊழல்?
Table 1
மாநகராட்சி
நிலுவை விவரம் 2011
வ.எண்
|
மாநகராட்சி
|
நிலுவைத்
தணிக்கைப் பத்திகள்
|
தொகை
லட்சத்தில்
|
ஆண்டு வரை
|
1
|
சென்னை
|
37692
|
15732801
|
2008-09
|
2
|
மதுரை
|
23180
|
28035.74
|
2008-09
|
3
|
கோவை
|
12921
|
29471.83
|
2008-09
|
4
|
திருநெல்வேலி
|
3688
|
6998.32
|
2008-09
|
5
|
சேலம்
|
7700
|
282819.93
|
2008-09
|
6
|
திருச்சி
|
7121
|
82191.14
|
2008-09
|
7
|
வேலூர்
|
1246
|
2039.51
|
2009-10
|
8
|
ஈரோடு
|
2642
|
3464.91
|
2008-09
|
9
|
திருப்பூர்
|
2338
|
20900.88
|
2009-10
|
10
|
தூத்துக்குடி
|
4070
|
17056.14
|
2008-09
|
மொத்தம்
|
102598
|
630306.41
|
Table 2
மூன்றாம் நிலை
நகராட்சிகளின் நிலுவை விவரம் 2011
வ.எண்
|
நகராட்சிகளின்
விவரம்
(3 ம் நிலை )
|
நிலுவைத்
தணிக்கைத் தடைகளின் எண்ணிக்கை
|
தொகை
(லட்சத்தில்)
|
1
|
அனகாபுத்தூர்
|
210
|
116
|
2
|
மறைமலைநகர்
|
561
|
2461
|
3
|
பம்மல்
|
471
|
1603
|
4
|
உள்ளகரம்(புழுதிவாக்கம்)
|
302
|
246
|
5
|
மதுரவாயல்
|
301
|
1210
|
6
|
பூந்தமல்லி
|
527
|
3718
|
7
|
திருவேற்காடு
|
388
|
1174
|
8
|
திருத்தணி
|
325
|
1816
|
9
|
மணலி
|
509
|
2053
|
10
|
வளசரவாக்கம்
|
384
|
1158
|
11
|
கள்ளக்குறிச்சி
|
865
|
1141
|
12
|
தாராபடவேடு
|
295
|
347
|
13
|
ஜோலார்பேட்டை
|
438
|
335
|
14
|
மேல்விஷாராம்
|
674
|
284
|
15
|
பேரணாம்பட்டு
|
520
|
282
|
16
|
சத்துவாச்சாரி
|
346
|
198
|
17
|
நரசிங்கபுரம்
|
231
|
284.00
|
18
|
இனாம்
கரூர்
|
392
|
322.00
|
19
|
தாந்தோணி
|
203
|
208
|
20
|
துவாக்குடி
|
218
|
441
|
21
|
ஜெயக்கொண்டம்
|
202
|
102
|
22
|
அரியலூர்
|
301
|
230
|
23
|
பெரம்பலூர்
|
633
|
409
|
24
|
வேதாரண்யம்
|
3728
|
2931
|
25
|
கீழக்கரை
|
469
|
279
|
26
|
இராமேஸ்வரம்
|
504
|
714
|
27
|
ஆளையூர்
|
445
|
478
|
28
|
அவனியாபுரம்
|
56
|
237
|
29
|
திருப்பரங்குன்றம்
|
255
|
753
|
30
|
கூடலூர்
|
274
|
7090
|
31
|
பள்ளிப்பாளையம்
|
164
|
546
|
32
|
வேலம்பாளையம்
|
519
|
128
|
33
|
கவுண்டம்பாளையம்
|
480
|
443
|
34
|
குனியமுத்தூர்
|
520
|
586
|
35
|
குறிச்சி
|
287
|
222
|
36
|
நல்லூர்
|
201
|
66
|
37
|
பல்லடம்
|
336
|
448
|
38
|
வால்பாறை
|
356
|
252
|
39
|
காசிப்பாளையம்(கிழக்கு)
|
493
|
2878
|
40
|
பெரியசேமூர்
|
380
|
487
|
41
|
புஞ்சைபுளியம்பட்டி
|
348
|
333
|
42
|
சூரம்பட்டி
|
483
|
587
|
43
|
வீரப்பன்சத்திரம்
|
422
|
850
|
44
|
வெள்ளக்கோயில்
|
230
|
594
|
45
|
கூடலூர்
|
456
|
237.00
|
46
|
நெல்லியாளம்
|
233
|
275.00
|
47
|
திருத்தங்கல்
|
273
|
246.00
|
48
|
அம்பாசமுத்திரம்
|
533
|
377
|
49
|
விக்கிரமசிங்கபுரம்
|
1067
|
316
|
50
|
காயல்பட்டினம்
|
547
|
569
|
மொத்தம்
|
23355
|
43060
|
Table 3
நகராட்சிகளின்
நிலுவைத் தொகை 2011
வ.எண்
|
நகராட்சிகளின்
விவரம்
|
தணிக்கைத்
தடைகளின் எண்ணிக்கை
|
நிலுவைத்
தொகை (லட்சத்தில்)
|
1
|
காஞ்சிபுரம்
|
1819
|
2700
|
2
|
செங்கல்பட்டு
|
1310
|
3576
|
3
|
பல்லாவரம்
|
1555
|
9930
|
4
|
மதுராந்தகம்
|
1024
|
3165
|
5
|
ஆலந்தூர்
|
2525
|
4540
|
6
|
தாம்பரம்
|
1725
|
5713
|
7
|
திருவள்ளூர்
|
2129
|
3074
|
8
|
ஆவடி
|
2424
|
11019
|
9
|
அம்பத்தூர்
|
1670
|
11102.5
|
10
|
திருவெற்றியூர்
|
2519
|
12764
|
11
|
கத்திவாக்கம்
|
1835
|
3871
|
12
|
மாதவரம்
|
1242
|
2399
|
13
|
கடலூர்
|
1735
|
3248
|
14
|
பண்ருட்டி
|
1990
|
2312
|
15
|
நெல்லிக்குப்பம்
|
1088
|
780
|
16
|
சிதம்பரம்
|
1401
|
845
|
17
|
விருத்தாச்சலம்
|
2231
|
3011
|
18
|
விழுப்புரம்
|
1744
|
2400
|
19
|
திண்டிவனம்
|
1402
|
2158
|
20
|
குடியாத்தம்
|
1007
|
642
|
21
|
ஆற்காடு
|
685
|
1132.00
|
22
|
ஆம்பூர்
|
999
|
857
|
23
|
திருப்பத்தூர்
|
1420
|
1478.00
|
24
|
வாணியம்பாடி
|
593
|
620
|
25
|
இராணிப்பேட்டை
|
518
|
774
|
26
|
வாலாஜாபேட்டை
|
379
|
762
|
27
|
அரக்கோணம்
|
1676
|
1101
|
28
|
திருவண்ணாமலை
|
1395
|
4048
|
29
|
வந்தவாசி
|
986
|
631
|
30
|
ஆரணி
|
1033
|
2001
|
31
|
திருவத்திபுரம்
|
1157
|
1898.00
|
32
|
ஆத்தூர்
|
1172
|
456
|
33
|
மேட்டூர்
|
1090
|
527.00
|
34
|
எடப்பாடி
|
1159
|
726
|
35
|
தருமபுரி
|
864
|
2901
|
36
|
ஓசூர்
|
1895
|
3942
|
37
|
கிருஷ்ணகிரி
|
1896
|
3865
|
38
|
மணப்பாறை
|
202
|
742
|
39
|
துறையூர்
|
666
|
930
|
40
|
குளித்தலை
|
446
|
182.00
|
41
|
கரூர்
|
3300
|
4274
|
42
|
நாகப்பட்டினம்
|
827
|
913
|
43
|
மயிலாடுதுறை
|
1980
|
1343
|
44
|
சீர்காழி
|
921
|
675
|
45
|
திருவாரூர்
|
1319
|
800
|
46
|
மன்னார்குடி
|
832
|
1870
|
47
|
திருத்துறைப்பூண்டி
|
1182
|
728
|
48
|
கூத்தாநல்லூர்
|
1054
|
710
|
49
|
தஞ்சாவூர்
|
3809
|
18794
|
50
|
பட்டுக்கோட்டை
|
2122
|
2242
|
51
|
கும்பகோணம்
|
2480
|
4836
|
52
|
மேலூர்
|
1690
|
1295
|
53
|
உசிலம்பட்டி
|
392
|
472
|
54
|
திருமங்கலம்
|
1872
|
818
|
55
|
பெரியகுளம்
|
759
|
4586
|
56
|
தேனி
|
851
|
9123
|
57
|
கம்பம்
|
397
|
2670
|
58
|
போடிநாயக்கனூர்
|
421
|
3946
|
59
|
சின்னமனூர்
|
498
|
5265
|
60
|
புதுக்கோட்டை
|
1323
|
2965
|
61
|
அறந்தாங்கி
|
1062
|
1133
|
62
|
திண்டுக்கல்
|
1192
|
11110
|
63
|
கொடைக்கானல்
|
1113
|
1962
|
64
|
பழனி
|
1932
|
2919
|
65
|
சிவகங்கை
|
1912
|
1349
|
66
|
தேவக்கோட்டை
|
383
|
565
|
67
|
காரைக்குடி
|
1222
|
2789
|
68
|
இராமநாதபுரம்
|
1534
|
2075
|
69
|
பரமக்குடி
|
1476
|
2324
|
70
|
மேட்டுப்பாளையம்
|
1931
|
1339
|
71
|
உடுமலைப்பேட்டை
|
1551
|
1483
|
72
|
தாராபுரம்
|
1081
|
2006
|
73
|
பவானி
|
1036
|
885
|
74
|
கோபிசெட்டிபாளையம்
|
743
|
1800
|
75
|
சத்தியமங்கலம்
|
1047
|
1365
|
76
|
பொள்ளாச்சி
|
1991
|
7848
|
77
|
நாமக்கல்
|
1248
|
2765
|
78
|
இராசிபுரம்
|
1103
|
747
|
79
|
கொமாரபாளையம்
|
1579
|
990
|
80
|
திருச்செங்கோடு
|
807
|
1887
|
81
|
உதகமண்டலம்
|
2593
|
4924
|
82
|
குன்னூர்
|
1137
|
2919
|
83
|
சங்கரன்கோயில்
|
1059
|
265
|
84
|
புளியங்குடி
|
533
|
109
|
85
|
கடையநல்லூர்
|
870
|
297
|
86
|
செங்கோட்டை
|
876
|
535
|
87
|
தென்காசி
|
1080
|
1587
|
88
|
கோவில்பட்டி
|
2465
|
3668
|
89
|
விருதுநகர்
|
1003
|
3924
|
90
|
சாத்தூர்
|
534
|
1300
|
91
|
அருப்புக்கோட்டை
|
1028
|
1377
|
92
|
சிவகாசி
|
733
|
1818
|
93
|
ஸ்ரீவில்லிபுத்தூர்
|
941
|
702
|
94
|
இராஜபாளையம்
|
1023
|
1994
|
95
|
நாகர்கோயில்
|
1013
|
6066
|
96
|
குளச்சல்
|
1578
|
6296
|
97
|
பத்மநாபபுரம்
|
836
|
4067
|
98
|
குழித்துறை
|
949
|
6728
|
மொத்தம்
|
128829
|
285430.5
|

1 comment:
பேரூராட்சி கணக்கு எதில் வரும் தோழரே
Post a Comment