INTROVERT காதல் - I
நீல டி சர்ட் போடவா
சிவப்பு டாப் போடவா
எனக் கேட்டு செல்ஃபி அனுப்புவாய்
எது பிடித்திருக்கிறதோ
அதுவே போடு என்பேன்..
தேவதை
தேவதை
சிவப்பு டாப் போட்டு வந்தால் என்ன?
நீல டிசர்ட் போட்டு வந்தால் என்ன?
கஃபேவில் சூடான கேப்பச்சினோவா?
இல்லை சில்லென்ற ஃப்ரேப்பேவா?
என்று கேட்பாய்
உனக்கு என்ன சொல்கிறாயோ
அதுவேதான் எனக்கும் என்பேன்.
உன்னோடு அமர்ந்து
உன்னோடு அமர்ந்து
நீ குடிப்பதையே
குடிப்பதற்கு
மேலான ருசியை
எந்த பானம் தந்துவிடமுடியும்?
லேயர்ட் கட்டா
ஃபெதர்கட்டா என பார்லரில் இருந்து
கால் பண்ணும்
உன்னிடம் இரண்டுக்கும்
வித்தியாசம் தெரியாது என்பேன்.
எட்ட நின்று பார்ப்பவனுக்குத்தான்
பட்டாம்பூச்சியின் சிறகு
அழகாக இருக்க வேண்டும்.
பட்டாம்பூச்சிக்கு அதைப் பறக்கச் செய்வதே
பட்டாம்பூச்சிக்கு அதைப் பறக்கச் செய்வதே
போதும் இல்லையா?
ஈவ்னிங் ஷோவிற்கு
மெல்ல ஊரும் மலையாள படமா
வேகமாய் பறக்கும் தெலுங்கு படமா
என கேட்ட போது கூட
எதற்கு டிக்கெட் இருக்கிறதோ அதுவே போகலாம் என்பேன்.
ஓரக்கண்ணால்
ஓரக்கண்ணால்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறவனுக்கு
திரையில் என்ன படம் ஓடினால் என்ன?
இப்படி
இப்படி
அவசியமற்ற பதில்களைக் கொண்ட
ஆயிரம் ஆயிரம் கேள்விகளை
என்னிடம் கேட்டிருக்கிறாய்.
நான்
சுயபுத்தி இல்லாதவன்,
முடிவெடுக்கத் தெரியாதவன் என
நீ நினைப்பதற்கான எல்லா நியாயங்களும்
உனக்கு இருக்கிறது.
இருந்தாலும்
மேட்ரிமோனியில் போய்
பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன்
என்று சொல்வதற்கு முன்பு
ஒரே ஒருமுறை
நீ என்னைக் காதலிக்கிறாயா?
நீ என்னைக் காதலிக்கிறாயா?
என்று கேட்டிருக்கலாம்.
---------------------
INTROVERT காதல் - II
நீல டி சர்ட் போடவா
சிவப்பு டாப் போடவா
எனக் கேட்டு செல்ஃபி அனுப்புவேன்
எது பிடித்திருக்கிறதோ
கஃபேவில் சூடான கேப்பச்சினோவா?
லேயர்ட் கட்டா
ஃபெதர்கட்டா என பார்லரில் இருந்து
க்ளீன் ஷேவ்க்கும்
ட்ரிம்மிங்கிற்குமான வித்தியாசம் எனக்கு தெரியும்.
இப்படி
INTROVERT காதல் - II
நீல டி சர்ட் போடவா
சிவப்பு டாப் போடவா
எனக் கேட்டு செல்ஃபி அனுப்புவேன்
எது பிடித்திருக்கிறதோ
அதுவே போடு என்பாய்..
பதிலுக்கு
பதிலுக்கு
நீ பச்சை சட்டை போடவா
கருப்பு குர்தா போடவா என்று
கேட்டிருக்கலாம் தானே..
கஃபேவில் சூடான கேப்பச்சினோவா?
இல்லை சில்லென்ற ஃப்ரேப்பேவா?
என்று கேட்பேன்
உனக்கு என்ன சொல்கிறாயோ
அதுவேதான் எனக்கும் என்பாய்.
வெவ்வேறு பானங்கள் சொல்லியிருந்தால்
வெவ்வேறு பானங்கள் சொல்லியிருந்தால்
ருசி பார்க்க என்று சொல்லியாவது
இருவரும் அடுத்தவர் கப்பில்
கொஞ்சம் குடித்திருக்கலாம் தானே..
லேயர்ட் கட்டா
ஃபெதர்கட்டா என பார்லரில் இருந்து
கால் பண்ணும்
என்னிடம் இரண்டுக்கும்
வித்தியாசம் தெரியாது என்பாய்.
க்ளீன் ஷேவ்க்கும்
ட்ரிம்மிங்கிற்குமான வித்தியாசம் எனக்கு தெரியும்.
சலூனில் உனக்கு என் நினைவு
வரவே இல்லைதானே.
ஈவ்னிங் ஷோவிற்கு
மெல்ல ஊரும் மலையாள படமா?
வேகமாய் பறக்கும் தெலுங்கு படமா ?
மெல்ல ஊரும் மலையாள படமா?
வேகமாய் பறக்கும் தெலுங்கு படமா ?
என கேட்ட போது கூட
எதற்கு டிக்கெட் இருக்கிறதோ
அதற்கே போகலாம் என்பாய்.
நைட்ஷோவாக இருந்தாலும் பரவாயில்லை
நைட்ஷோவாக இருந்தாலும் பரவாயில்லை
நானே உன்னை வீட்டில் விடுகிறேன் என்று
சொல்லியிருக்கலாம்தானே..
இப்படி
உன் வாழ்வில் என்னையும்
என் வாழ்வில் உன்னையும்
நுழைக்க எடுத்த முயற்சி
எல்லாம் தோற்றுப் போன பின்பு
உனக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம்
இல்லை எனில் காதல் என்றாலே கூட
பிடிக்காமல் இருக்கலாம்.
இத்தனைக்கு பிறகும்
மேட்ரிமோனியில் போய் பதிவு
செய்துவிட்டு வந்து உன்னிடம் சொல்கிறேன்..
குறைந்த பட்சம் அதே மேட்ரிமோனியில்
நீயும் பதிவு செய்யலாம்தானே..

No comments:
Post a Comment