Tuesday, July 28, 2026

உடனே கொன்றிருக்கலாம் தானே!


எல்லா கண்ணாடி கோப்பைகளும்
கீழே விழுந்தவுடன்
உடைந்து விடுகின்றன.

எல்லா எட்டிக்காய்களும்
நாவில் பட்டவுடன்
கசந்து விடுகின்றன.

அழுகிய பழங்களின் நாற்றம்
நாசியைத் தொட்டவுடன்
பரவி விடுகிறது.

எல்லா தோட்டாக்களும்
இதயத்தை அடைந்தவுடன்
கொன்று விடுகின்றன.

ஏன் 

சில பிரிவுகள் மட்டும் 

இதயத்தின் இடுக்குகளில்

அசைவற்று கிடந்து விட்டு


பத்து வருடங்கள் கழித்து

உடைக்கின்றன.

கசக்கின்றன.

நாறுகின்றன.

கொல்கின்றன.




No comments:

Post a Comment