"மிஸ் யூ"விற்கு மேல்
ஒரு வார்த்தை இருக்கா?
இருக்கு.
உன்னைத் தேடுது.
"மிஸ் யூ"வை விட
"உன்னைத் தேடுது"க்கு
என்ன மகத்துவம்?
"மிஸ் யூ" என்பது
தொலைந்தவரைச் சார்ந்தது.
"உன்னைத் தேடுது" என்பது
தொலைத்தவரைச் சார்ந்தது
உன்னைத் தேடுறேன்
என்று யாரும் சொல்வதில்லை
ஏனெனில் இங்கே
தேடுபவர் ஓர் அஃறிணை
"உன்னைத் தேடுது" என்பதற்கு
எது தேடுகிறது
என்று கேட்கலாம்.
என் இதயம்
என் உயிர்
என் உடல்
என் ஆன்மா
எதுவென்றே தெரியவில்லை.
என ஓராயிரம் பதில்கள் கிளைவிடும் .
”மிஸ் யூ” என்பதற்கு கூட
எதை என்கிற கேள்வியை
எழுப்பி
உன் இதயத்தை
உன் உயிரை
உன் உடலை
உன் ஆன்மாவை
உன் அனைத்தையும்
என பதில்களை அடுக்கலாம் தான்
ஆனால் உன்னை
மிஸ் செய்வதற்கு
நீ எப்போதாவது
என்னுடையதாக இருந்திருக்க வேண்டும்.
உன் இதயம்
உன் உயிர்
உன் உடல்
உன் ஆன்மா
இதில் ஒன்றாவது எனக்கு
பரிட்சையமாய் இருந்திருக்க வேண்டும்
நீ ஒருபோதும்
என்னுடையதாக இல்லை என்றாலும்
என்னை உனக்கு
யாரென்றே தெரியவில்லை என்றாலும்
எனக்கு உன்னைத் தேடும்.
No comments:
Post a Comment