Saturday, November 14, 2009

மனிதன் என்ற பெயர் கொண்டவர்களே

நெஞ்சு பொறுக்குதில்லை
என்றான் பாரதி
உங்களை காணும்போதெல்லாம்

எப்படித்தான் பொறுக்கிறீர்கள்
உங்களின் இந்த
அடிமை விலங்குகளை

நீங்கள் உடைத்தெறிய வேண்டாம்
நான் உடைத்தெறிகிறேன்
உடன் மட்டும் வாருங்கள்...

வைகை வற்றியதற்கு,
வருந்தாமல் மீன் பிடிப்பது
சுலபமாகிவிட்டது என்கிறீர்கள்...

உங்கள் வியாபாரச்சந்தையில்
குழந்தைக்கான தாய்பாலையும்
விற்க்கப் பார்க்கிறீர்கள்...

3 comments:

பாரதி கண்ணம்மா said...

வா உடைத்தெரியலாம் அடிமை விலங்குகளை..

பாரதி கண்ணம்மா said...

//வைகை வற்றியதற்கு,
வருந்தாமல் மீன் பிடிப்பது
சுலபமாகிவிட்டது என்கிறீர்கள்...//
அருமை !!

பாரதி கண்ணம்மா said...

//வைகை வற்றியதற்கு,
வருந்தாமல் மீன் பிடிப்பது
சுலபமாகிவிட்டது என்கிறீர்கள்...//

உண்மை !

Post a Comment