அப்பாவை அலுவலகத்திற்கு
அனுப்பிவிட்டு
என்னை பள்ளிக்கு
தயார் செய்துவிட்டு
சமையல் வேலை
துணிதுவைக்கும் வேலை
இப்படி எல்லா வேலையையும்
முடிக்க அம்மாவுக்கு
பகல் பதினொரு மணியாகும்
மேற்சொன்ன வேலைகளை
முறையே தங்கள் வீட்டில்
முடித்துவிட்டு-எதிர்வீட்டு
சாந்தி சித்தியும்-அடுத்தவீடு
கிருஷ்ணவேணி அத்தையும்
வர பதினொன்றுமுப்பது ஆகும்
பதினொன்று நாற்பத்தைந்துக்கு
ஆரம்பிக்கும் அவர்களது பேச்சு
பல சமயம் இடைவிடாமல்
நான்கு மணிக்கு
நான் வந்தபின் தான்முடிய்ம்
பல சமயம்
அவர்கள் பேசும் ஆர்வத்தில்
சாப்பிட மறந்திருக்கிறார்கள்
பகலில் பேசியதைநினைத்து
அம்மா பலசமயம்
தூக்கத்தில் சிரித்திருக்கிறாள்
அவ்ர்கள் பேச்சில்
கம்பனும் காரல்மார்க்சும் இருந்ததில்லை
பாரதியும் ஷெல்லியும் வந்ததில்லை
உலக அரசியல்
வறுமைக்கோடு
பொருளாதார மந்த நிலை
பெண்களுக்கான இடஒதுக்கீடு
இப்படி எதுவுமே இருந்ததில்லை
இன்றைய சமயல்
பாலிய கனவுகள்
புதிதாய் வந்த புடவை
குழந்தை செய்த குறும்பு
கணவன்டம் வாங்கிய திட்டு
நாத்தனாரின் கொடுமைகள்
சீரியல் கதைகள்
இவையே அவர்கள்
பேச்சின் மையம்
இவற்றை பற்றிதான்
பேசுவார்கள்
தினம்தினம் பேசுவார்கள்
தீராமல் பேசுவார்கள்
சத்தமாக சிரிப்பார்கள்
செல்லமாக சணடையிடுவார்கள்
இது போன்ற
பெண்கள் கூட்டம்
அலுவலக நேரத்தில்
உங்கள் வீட்டிலும்
நடக்கலாம்
இயல்பாகவே
பெண்களின் மூளை
அதிகம் பேசும் விதமாக
அமைக்கப்பட்டிருக்கிறது
ஆனால் அது
ஆண்களுக்கு முன்னே
அல்ல
No comments:
Post a Comment