ஈக்கள்
எங்கிருந்து வருகின்றன
என தெரியவில்லை
தீடீரென வந்துவிடுகின்றன
வில்லன் வேடத்தில் நடிக்கும்
நம்பியார் போல
முன்னிரு கைகளை
அது தேய்த்துக் கொண்டாலும்
அவைகளை பார்த்து
பயமோ அறுவருப்போ
வருவதில்லை
அவை
விரும்பத்தக்கது அல்ல என்றாலும்
நம்மால் சற்று சகிப்புத்தன்மையுடன்
ஏற்றுக்கொள்ளப்பட்டது
இந்த ஈக்கள்
மலத்தில் மொய்க்கும்
இனிப்பில் மொய்க்கும்
ரத்தம் உரைந்த இடத்தில் மொய்க்கும்
பிணத்தில் மொய்க்கும்
ஆங்கிலத்தில்
இந்த ஈக்களின்
முன்னால் `வெண்ணையை` போட்டால்
வண்ணத்துப் பூச்சியாகிவிடும்
பட்டர்ஃப்ளை
மேற்சொன்ன
கவிதையில்
நீங்கள்
ஈக்களுக்கு மனிதர்களையும்
மலத்திற்கு இலவசங்களையும்
இனிப்பிற்கு லஞ்சங்களையும்
ரத்தம் உரைந்த இடத்திற்கு ஓட்டு காசையும்
பிணத்திற்கு பதவிக்கும்
வெண்ணைக்கு பொதுவுடைமையையும்
உவமை செய்து கொண்டால்
நான் பொறுப்பல்ல
No comments:
Post a Comment