ஒரு இரவு
நான் தூங்க
ஆரம்பித்த பின்
நான் எழுதிய கவிதைகளேல்லாம்
என் கவிதை புத்தகத்தின் தாள்களை
விட்டு வெளியேறி என் படுக்கையறைக்கு
வந்துவிட்டன.
தனியாய் படுத்திருக்கும்
என்னை சூழ்ந்துவட்டமாய்
அமர்ந்து கொண்டு
ஏதேதோ பேச
ஆரம்பித்தன.
சின்ன சப்தம் கேட்டு
கண்விழித்து என்கவிதைகள்
என்றுணர்ந்து ஆடாமல்
பேசுவதை கவனித்தேன்.
என்னை எழுப்பிவிடக்கூடாது
என்று மிகவும்
சன்னமான குரலில்
பேச ஆரம்பித்தன
"இவன் தான் நமது கடவுளா?"
கேட்டது என் முதல் கவிதை.
"ஆமாம் ஆனால் அவனை கடவுளாக்கியது நாம்"
பதில் சொல்லியது என் முதல்கவிதைப் போட்டியில்
பரிசு வாங்கி தந்த கவிதை.
"இவன் நல்லவனா?"
இது என் 8 வயது கவிதை.
"அப்படி தான் அவன் நினைக்கிறான்"
என் 12 வயது கவிதை.
"அது உண்மையா?"
"அது இனிமேல் தான் தெரியும்?"
"எப்படி கண்டுபிடிப்பது?"
"இனிமேல் பிறக்கப்போகும் கவிதையை வைத்து தீர்மானிப்போம்"
"இவன் காதலிக்கிறானா?"
"இல்லாமல் நாங்கள் வந்திருப்போமா?"
காதல் கவிதைகள் ஒரேகுரலில் சொல்லின.
"யாரை காதலிக்கிறான்?"
"அவனுக்கே இதுவரை தெரியாது"
"நாமெல்லாம் எப்படி இவனுள் வந்தோம்?"
"இவன் தான் நமக்குள் வந்து நம்மை வெளியே இழுத்துப் போடுகிறான்".
"நாம் முழுக்க முழுக்க இவனால் செய்யப்படவில்லையா?"
"இல்லை இவனை முழுக்க செய்வதுதான் நம் வேலை"
"இவனை மட்டுமா?"
"இவன் மூலம் இவ்வையத்தையும்"
"முடியுமா?"
"முடியும் என்றுதான் இவன் நம்புகிறான்".
அப்பொழுது
நான் விழித்திருந்ததை
பார்த்த எனது
சமூக விழிப்புணர்வு கவிதை
மற்ற கவிதைகளை
கூட்டிக்கொண்டு
கவிதைப் புத்தகத்தில்
போய் ஒழிந்துகொண்டது.
அடுத்த நாள் காலையில்
என் கவிதைபுத்தகத்தில்
இந்த கவிதை எழுதப்பட்டிருந்தது.
Wednesday, November 17, 2010
Tuesday, November 16, 2010
கவிதை எழுதவேண்டுமென கை அரிக்கிறது.

கவிதை எழுதவேண்டுமென
கை அரிக்கிறது.
நான் எழுதிய
பெண்முக்கியத்துவக் கவிதைகளைப்
படித்து என்னைத்தவிர
எந்த ஆணும் மாறியதில்லை.
புரட்சி பற்றி
எழுதிவந்தாலும்
புரட்சி செய்வதற்கான
வீரம் எனக்குள்ளேயே
இருப்பதாகத் தெரியவில்லை.
என்
காதல் கவிதைகளை
படித்த பெண்கள்
இதுவரை யாரும்
காதல் சொன்னதில்லை.
என்
உறவுகள் பற்றி
எழுதிய கவிதைகளை
என் உறவினர்
ஒருவர்கூட படித்ததில்லை.
இயற்கை அழகை
எழுதுவதால் இயற்கையும்
கர்வம் கொள்ளப்போவதில்லை.
ஆனாலும் ஏனோ
கவிதை எழுதவேண்டுமென
கை அரிக்கிறது.
Thursday, November 4, 2010
கனவும் நானும்..
நான் ஒரு கனவு மனிதன்.
ஒரு பரிசல் கொண்டு கடல் கடக்கும் கனவை சாகாரா பாலைவனத்தில் கொண்டிருந்தேன்.
இறுக்கி அடைத்த ஒரு இருட்டு அரையின் கதவிடுக்கு வழியே ஒழுகிவரும் ஒலிக்கற்றையாக என் கனவு வழிந்து வந்தது.
அது என் கனவல்ல.. ஒரு நூற்றாண்டுக்கான கனவு.....
என் கனவின் ஆழம் அளக்கமுயன்று நானே பல சமயம் மூழ்கி செத்திருக்கிறேன்..மீண்டும் என் கனவின் மூலமே உயிர்த்தெழுந்திருக்கிறேன்..
கீழ்வானில் இருந்து மேல்வானம் வரை அளந்து ஓடிய நெடும் மின்னல் ஒன்றை என் கனவின் முதுகெழும்பாக கொண்டிருந்தேன்.நொடியில் தோன்றி மறைந்துவிடும் என்கிற சிலரது கேளிப் பேச்சுக்களைத் தாண்டி அதை நான் ஒரு கிழவியின் கடைசி மூச்சாக பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.....
எனக்கான கனவில் என் இளமை முழுக்க இழக்கத் தயாராயிருந்தேன் ஏனென்றால் என் கனவு என் முதுமையின் முடிவில் இளமையைத் திருப்பிக் கொடுத்துவிடும் சக்தி படைத்தது....
நிரைய மழைத்துளிகளால் ஆன ஒரு கார்முகிலாய் என் கனவை என்னைப் போல் வேரொருவன் கிடைத்தால் அவன் மீதும் தூவத் தயாராய் இருக்கிறேன்..
அப்படி எவனோ தூவிவிட்டதை தான் நான் தூக்கி சுமந்து கொண்டு திரிகிறேன்.
எங்கோ, எப்பொழுதோ தொடங்கிய கனவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது....
இன்னும் இன்னும் நீளும் அது.....
இதே கனவுடன் நீங்கள் இருந்தால் நீங்கள் தான் நான்..

ஒரு சுயநலக்காரனின் உளரல்
கவிஞன் எனும் நான்,என்னையே அறியமுற்பட்டேன்..என் கனவு தேசத்தை விட்டுவிட்டு எவனோ செய்த உலகத்தில், இலையுதிர்காலத்தின் கடைசி இலையாய் ஒட்டியும் ஒட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு பிடித்தோ பிடிக்காமலோ என் மீது வண்ணங்களை எவனோ ஒருவன் பூசிக் கொண்டு இருக்கிறான்.எவன் மீதோ பூசுவதற்கு என் கையில் வண்ணக்கலவை திணிக்கப்பட்டிருக்கிறது..நானும் அவனது முகத்தில் வண்ணங்களை அடித்துக்கொண்டிருக்கிறேன்,எப்போதாவது சுய பிரஞை பெற்று இதை எல்லாம் மாற்ற நினைத்தால் "புரட்சிக்காரன்" என்று பச்சை குத்திவிடுவார்களோ என்ற பயம் வந்து சூழ்ந்து கொள்ள ஒரு சுயநலவாதியாய் இருக்க சம்மதித்து விடுவேன்.என் போல் புரட்சிக்காரனாய் மாற நினைத்து முடியாமல் போனவர்களின் தோழமை கிடைக்கவும், அதை பிடிக்காதவர்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளாமல் இருக்கவும் ஒரே சமயத்தில் ஆசைப்பட்டேன்.இப்பொழுது புரட்சி ஏதும் செய்யத் துணிவில்லாமல் மற்றவர்களை புரட்சி செய் என்று சொல்லும் கோழையாய் இருக்கிறேன்.இந்த வண்ணங்களை அழிக்க தண்ணீர் கொண்டு வராமல் பெருமழை பெய்ய ஆணையிட்டுக் கொண்டிருக்கிறேன்.தற்செயலாய் சிறுசாரல் வந்தாலும் அதில் என்பங்கு உண்டேன்று வரலாறு சொல்லும் என்று நானே சொல்லிக் கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தை தான் நீங்கள் கவித்துவம் என்று சொல்கிறீர்கள்.
Subscribe to:
Comments (Atom)