Tuesday, November 16, 2010

கவிதை எழுதவேண்டுமென கை அரிக்கிறது.


கவிதை எழுதவேண்டுமென
கை அரிக்கிறது.

நான் எழுதிய
பெண்முக்கியத்துவக் கவிதைகளைப்
படித்து என்னைத்தவிர
எந்த ஆணும் மாறியதில்லை.

புரட்சி பற்றி
எழுதிவந்தாலும்
புரட்சி செய்வதற்கான
வீரம் எனக்குள்ளேயே
இருப்பதாகத் தெரியவில்லை.

என்
காதல் கவிதைகளை
படித்த பெண்கள்
இதுவரை யாரும்
காதல் சொன்னதில்லை.

என்
உறவுகள் பற்றி
எழுதிய கவிதைகளை
என் உறவினர்
ஒருவர்கூட படித்ததில்லை.

இயற்கை அழகை
எழுதுவதால் இயற்கையும்
கர்வம் கொள்ளப்போவதில்லை.

ஆனாலும் ஏனோ
கவிதை எழுதவேண்டுமென
கை அரிக்கிறது.

1 comment:

Unknown said...

//ஆனாலும் ஏனோ
கவிதை எழுதவேண்டுமென
கை அரிக்கிறது.//


எழுதாவிட்டாலும் எதுவும் மாறப்போவதில்லை. ஆதலால்
எழுதுவதை எழுதிவிடுங்கள் ...

Post a Comment