கடற்கரையில் தேநீர்
குடித்துக் கொண்டிருந்தோம்..
உன் தேநீர் கோப்பைக்குள்
கடல் இருக்கிறது.
வானம் கிடக்கிறது.
அப்படியே நான் கொடுத்த முத்தங்களும்....
என் தேநீர் கோப்பையில்
நீ மட்டும் இருக்கிறாய்...
உன் தேநீருக்கான சர்க்கரை
என் இரவில் படிந்திருக்கிறது.
என் தேநீருக்கு
உன் உலராத
உதடுகள் வைத்திருக்கிறாய்
தேநீர் கறையில்
ஒட்டியிருக்கிறது
கடல்.
பின்பு
இருவரும் சேர்ந்து
கடலைக் குடித்துவிட்டு
தேநீரில் நீந்தகிளம்புகிறோம்...

1 comment:
கோப்பையின் நிற மாற்றத்தினால்
தேநீர் கசக்கவும் கூடும்
Post a Comment