என்னை முழுவதும்
உருக்கியெடுக்கும் வலியை
கடத்த விரும்புகிறேன்
அழலாம்...
சுருண்டு படுக்கலாம்
நான்
புன்னகை செய்கிறேன்.
உன்மேல் எல்லை
மீறும் என்கோபத்தை
காட்ட விரும்புகிறேன்
கெட்டவார்த்தையில் திட்டலாம்
கொலை செய்யலாம்
நான்
மன்னிக்கிறேன்.
உலகை மறக்கும்
போதை ஒன்று
தேவைப்படுகிறது..
தேநீருடன் புகைக்கலாம்
மது அருந்தலாம்
நான்
புத்தகம் வாசிக்கிறேன்..
மிக மகிழ்ச்சியான
தருணம் ஒன்று
பிறக்கிறது..
சிரிக்கலாம்
துள்ளி குதிக்கலாம்
நான்
செடி நடுகிறேன்.
நெரிசலான இரயில்நிலையத்தில்
எனது இருப்பை
உணர்த்த விரும்புகிறேன்
உரக்க பாடலாம்
திடீரென ஆடலாம்
நான்
கவிதை எழுதுகிறேன்...
1 comment:
மிக அருமை
Post a Comment