Sunday, July 7, 2013

சுயமற்றவனின் சுயம்

1





திருடன் வருகிறான் போகிறான்

நான் நட்சத்திரங்களைப்

பூட்டுவதில்லை





2.



எப்படியோ வற்றிவிட்டது

கடல் - மேகம்

பொங்காதிருக்கட்டும்.





3.





கடவுள் மறுத்த தினத்தில்

கடவுள் ஆனேன்

புத்தனைப் போலவே.... இயேசுவைப் போலவே







4.





"நீங்கள் எத்தனை பேர்?"

என்பவர்களிடம்

நடு விரலுயர்த்திக் காட்டுவேன்..





5.



நீ வந்ததும்

வந்தைப்போலவே - நீ

போனதும் வந்தது கவிதை


No comments:

Post a Comment