Thursday, March 25, 2010

தொலைபேசிக் காதலன்


நமக்குள் ஏற்பட்ட
சண்டையால்
உன் பெயர்
எனது sentitems ல்
இருந்து வெளியேறியது.
உனது அழைப்புகள்
அனைத்தையும்
missedcals ஆக்கினேன்.
சில மாதங்களுக்குப்
பிறகு inboxல்
உன் பெயர் இல்லை.
பின்பு ஒரு நாள்
contactsல் இருந்து
உன் பெயர்
காணாமல் போய்விட்டது.
தவறு எனதென
அறிந்து உன்
எண்களை தேடி
அழைத்தேன்,
எவளோ ஒருத்தி
subscriber cannot be reached
என்கிறாள்...

Monday, March 22, 2010

அவள்,வண்ணம்,வானவில்


அவள் வானவில்லில்
சாய்ந்திருப்பது போல்
ஓவியம் வரைந்தேன்

அவளது
வெட்கத்துக்கு சிவப்பு வண்ணம்
மகிழ்ச்சிக்கு மஞ்சள் வண்ணம்
காதலுக்கு பச்சை வன்ணம்
குறும்புக்கு நீல வண்ணம்
தூய்மைக்கு வெண்மை
ரகசியத்துக்கு கருப்பு வன்ணம்
இப்படி எல்லா வண்ணங்களையும்
அவளுக்கே வரைந்துவிட்டேன்
வானவில்லுக்கு என்ன வணணம் வரைவது?
இருக்கவே இருக்கிறது
அவளின் நிறம்....

உணர்ந்தேன்


இன்று
என் ஜலதோசத்திற்கான
காரணத்தை நேற்று
உன் கனவில்
மழை வந்ததை
நீ உரைத்த போது
உணர்ந்தேன்...

தனிமை




எனக்கு தனிமைநேரம்
என்று எதுவும் இல்லை
நீ என்னுடன் இருக்கும்
நேரம் தான் என்
தனிமை நேரம்

வார்த்தைகள்


அம்மாவிடம் பேசும்
எந்த உரையாடலும்
"சாப்பிட்டியா?" என்ற
வார்த்தை இல்லாமல் முடிவதில்லை

அப்பவிடம் பேசும்போது
பணம் பற்றி
பேசாமல் இருக்கவே
முடியாது

உறவினர்களுடன் இடையே
ஆன பேச்சு
நல விசாரிப்புகள் இல்லாமல்
இருந்ததில்லை

முத்தம் இல்லாமல்
என்றுமே காதலியிடம்
பேசி முடிக்க
முடியாது

"அப்புறம்" என்ற
வார்த்தை இல்லாமல்
நண்பர்கள் பேசியதாய்
வரலாறு கிடையாது

இப்படி நிலையான
பல வார்த்தைகள்
இருந்தாலும்
எல்லா உரையாடல்களும்
மௌனத்தில் தொடங்கி
மௌனத்தில்தான் முடிகின்றன..

Saturday, March 20, 2010

பாடல்


வானொலியில்
பிடித்த பாட்டு
அலைபேசியில்
உன் அழைப்பு
வானொலியை
நிறுத்திவிட்டு
அழைப்பை
ஏற்றேன்
தொடர்கிறது
பாட்டு

உண்மை விளங்க, செய்


நீ சர்க்கரைப் பெண்
என்று சொன்னதற்கு
நம்பமட்டேன் என்றாயே
இந்த நெல்லிக்கனியை
உண்டுவிட்டு உன்
உமிழ் நீரைக் குடி
உண்மை விளங்கும்...

கவிதை ஆகும் சொற்கள்


கிறுக்கி
லூசு
அழகி
செல்லம்
எல்லாமே கவிதையாகின்றன
உன்னை அழைக்கப்
பயன்படுவதால்...

நீ வரும் வரிசை

மழை,நிலா எனத் தொடங்கி
பனித்துளி, மலர் என தொடர்ந்து
யானை, ரயில் என முடியும்
சலிக்காத விசயங்களின்
வரிசையில் நானும் ஒன்றா?
எனக் கேட்டாய் நீ

நீ நீ என தொடங்கி
நீ நீ என தொடர்ந்து
நீ நீ என முடியும்
வரிசையில் வருகிறாய்
நீ என்றேன் நான்

Sunday, March 14, 2010

ஒரு மழைத்துளியின் வேண்டுதல்



மேகம் ஒன்றில்
ஒட்டி நின்ற
மழைத்துளி வேண்டியது
மோட்சம் கேட்டு...

மேகம் உடைந்ததும்
ஒவ்வொரு துளியாய்
விழுந்தன,மண்நோக்கி...

கடலில் விழுந்து முத்தாகவேண்டும்
நதியில் விழுந்து நன்நீராக வேண்டும்
நிலத்தில் விழுந்து நெல்லாகவேண்டும்
கவிஞனில் விழுந்து கவிதையாகவேண்டும்

வேண்டுதல்களுடன் பூமியை
தொட்டு விழுந்த இடமோ
சேறு

தன் நிலையை
எண்ணி நொந்தது
மழைத்துளி

எங்கிருந்தோ வந்த
வாகனம் சேற்றை
அவள் மேல்
வீசிவிட்டு போக
கிட்டியது மோட்சம்.....