நண்பர்களே உங்களுக்கு சிவமுத்துமாணிக்கம் தெரியுமா? தெரிந்திருக்கும். இல்லை என்றால் சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள். அவர் ஒரு பணக்கார முற்போக்குவாதி.அவர் தன் மனைவியை கூட மரியாதையாக `வாங்க போங்க` என்றுதான் அழைப்பார்.இதற்கு மேல் அவர் பெண் அடிமைதனத்தை வெறுப்பவர் என்பதற்கு எடுத்துக்காட்டு இருக்கமுடியாது.
காலையில் எழுந்து கடவுளை வணங்கிய பின் தான் மற்ற காரியம் செய்வார். சிவமுத்துமாணிக்கம் நெற்றி நிறைய விபூதி ,நடுவில் வட்டமாக சந்தனப் பொட்டு, அதன் நடுவில் குங்குமம் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு கம்பீரமாக இருப்பார், என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.
அவர் கருப்புச் சட்டையுடனும் வெள்ளை பேன்டுடனுனும் வலம் வருவார்.அவர் ஒரு சுத்தமான பெரியாரியவாதி.கடவுளை வணங்குகிறார் பெரியார்வாதியா? இங்கு சற்று விளக்கம் தேவை என எண்ணுகிறேன் கடவுள் என்பது அவரது தந்தையின் பெயர் விளங்கிவிட்டதா? அவரது குடும்பத்தைப் பற்றி பார்ப்போம்.அவருக்கு ஒரே மனைவி அய்யம்மாள் இரண்டு மகன்கள் முத்தவன் கதிரவன் இளையவன் சூரியன். சிவமுத்துமாணிக்கம் தன் முற்போக்கை வீட்டிலும் கடைபிடிக்கும் ஒருசிலரில் ஒருவர் ஒருநாள் அவர் மனைவி
`பூனை குறுக்கப் போகுது பொருத்துப் போங்க` என்றார்
அதற்கு அவர்
`இங்க பாருங்க பூனை புலி சிறுத்தை எல்லாம் ஒரே இனம் இவை எல்லாம் குறுக்க போனவுடனே போகாது கொஞ்ச நேரம் காத்து இருந்துட்டு தான் போகும் அந்தக் காலத்துல காட்டு வழியா போரவங்களை புலி சிறுத்தைக் கிட்ட இருந்து காப்பாத்துரதுக்கு அப்படி சொன்னாங்க அதப் போய் இப்ப சொல்லிக்கிட்டு.......` என்றார்
இவ்வளவும் சொல்லும் நான் யார்? என்று நீங்கள் கேட்கலாம் எனக்கும் இந்த குடுபத்துக்கும் என்ன சம்மந்தம் ? என்று கேட்கலாம். கேட்காது விட்டாலும் நான் சொல்கிறேன். என் பெயர் ராஜா என்னை என் தாய் இந்த வீட்டில் தங்கியிருந்தபோது என்னை பிரசவித்து விட்டு இறந்து விட்டாள்.என்னுடன் அண்ணன் ஒருவனும் பிறந்தானாம் பிறந்தவுடனே அவன் இறந்துவிட்டான் மிச்சம் நான் மட்டுமே என்னை தன் குழந்தை போல் வளர்த்தார்கள் எனக்கென தனி அறை வேற கட்டித்தந்தார். அவர் தன் மகன்களைப் போல் என்னை பாதுகாப்பார்.
ஒருமுறை நான் மிகவும் சிறுவயதாய் இருக்கும் போது மாணிக்கம் ஐயா கொடுத்த பிஸ்கெட்டை உண்டு கொண்டிருந்தேன் அப்போது அதை கதிரவன் என்னிடம் இருந்து பிடிங்கினான் நான் என்னையே அறியாமல் கடித்து வைத்துவிட்டேன்.அழுது கொண்டே கதிரவன் தந்தையிடம் சொன்னான். என்னதான் சிறுவயது என்றாலும் பாரபட்சம் பார்க்காமல் வளர்த்தாலும் தன் மகனுக்கு ஒன்று என்றால் எல்லாத் தந்தைக்குமே கோபம் வரும் அதுவும் பல் பதியுமளவுக்கு கடித்து வைத்திருக்கிறேன்.அவ்வளவு தான் இனி இவ்வீட்டில் இடம் கிடையாது என்று நான் நினைத்தேன் ஆனால் அவரோ தன் மகனின் தவரை சுட்டிக் காட்டினார்.அதில் இருந்து மூத்த மகனுக்கு என்னை பிடிக்காது. இளையமகனும் வெறுத்தான் அதன் காரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்.
ஒரு நாள் எல்லோரும் சுற்றுலா செல்ல முடிவெடுத்தார்கள்.அவர்கள் காரில் செல்லும் போது நானும் தாவி ஏறிக் கொண்டேன்
`இந்த நாய் எல்லாம் நம்ம கூட வருதாக்கும் ச்சீ கீழ இறங்கு` என்று கத்தினான்.
`வந்தா வரட்டும் நீ பேசாம இருப்பா`என்றார்
அதிலிருந்து அவனுக்கு என்னைப் பிடிக்காது வருடங்கள் ஓடின.சிவமுத்து மாணிக்கம் நொடிந்து போனார்.அவர் மகன்கள் கல்யாணம் முடித்து மருமகள்கள் வந்தார்களவர் ஒரு பொம்மை போல் வாழ்ந்தார்.நான் அங்கிருந்து துரத்தப் பட்டேன்.ஒரு நாள் சிவமுத்து மாணிக்கம் இறந்துவிட்டார் எனக் கேள்வி பட்டு அந்த வீட்டுப் பக்கம் போன போது பதினாறாம் நாள் கருமாதி .போனால் போகட்டும் என்று ஒரு ஓரமாக இலைல் சோறு போட்டனர்.சாப்பிடப்பிடிக்காமல் வந்து விட்டேன்.
`இந்த நாய்கெல்லாம் சோறு போட்டேன் பாரு.....` மூத்தமருமகள் பேசியது கேட்டும் கேட்காதது போல் வந்துவிட்டேன்.எப்பொதாவது நான் அந்த குடும்பத்தார்களை பார்ப்பேன் காரில் என்னை கண்டுகொள்ளாமல் போவார்கள்.என்னதான் இருந்தாலும் நான் நான்கு கால் நாய் தானே...
Saturday, June 26, 2010
Friday, June 25, 2010
ஈ
ஈக்கள்
எங்கிருந்து வருகின்றன
என தெரியவில்லை
தீடீரென வந்துவிடுகின்றன
வில்லன் வேடத்தில் நடிக்கும்
நம்பியார் போல
முன்னிரு கைகளை
அது தேய்த்துக் கொண்டாலும்
அவைகளை பார்த்து
பயமோ அறுவருப்போ
வருவதில்லை
அவை
விரும்பத்தக்கது அல்ல என்றாலும்
நம்மால் சற்று சகிப்புத்தன்மையுடன்
ஏற்றுக்கொள்ளப்பட்டது
இந்த ஈக்கள்
மலத்தில் மொய்க்கும்
இனிப்பில் மொய்க்கும்
ரத்தம் உரைந்த இடத்தில் மொய்க்கும்
பிணத்தில் மொய்க்கும்
ஆங்கிலத்தில்
இந்த ஈக்களின்
முன்னால் `வெண்ணையை` போட்டால்
வண்ணத்துப் பூச்சியாகிவிடும்
பட்டர்ஃப்ளை
மேற்சொன்ன
கவிதையில்
நீங்கள்
ஈக்களுக்கு மனிதர்களையும்
மலத்திற்கு இலவசங்களையும்
இனிப்பிற்கு லஞ்சங்களையும்
ரத்தம் உரைந்த இடத்திற்கு ஓட்டு காசையும்
பிணத்திற்கு பதவிக்கும்
வெண்ணைக்கு பொதுவுடைமையையும்
உவமை செய்து கொண்டால்
நான் பொறுப்பல்ல
Thursday, June 24, 2010
ஆனால் அது.....
அப்பாவை அலுவலகத்திற்கு
அனுப்பிவிட்டு
என்னை பள்ளிக்கு
தயார் செய்துவிட்டு
சமையல் வேலை
துணிதுவைக்கும் வேலை
இப்படி எல்லா வேலையையும்
முடிக்க அம்மாவுக்கு
பகல் பதினொரு மணியாகும்
மேற்சொன்ன வேலைகளை
முறையே தங்கள் வீட்டில்
முடித்துவிட்டு-எதிர்வீட்டு
சாந்தி சித்தியும்-அடுத்தவீடு
கிருஷ்ணவேணி அத்தையும்
வர பதினொன்றுமுப்பது ஆகும்
பதினொன்று நாற்பத்தைந்துக்கு
ஆரம்பிக்கும் அவர்களது பேச்சு
பல சமயம் இடைவிடாமல்
நான்கு மணிக்கு
நான் வந்தபின் தான்முடிய்ம்
பல சமயம்
அவர்கள் பேசும் ஆர்வத்தில்
சாப்பிட மறந்திருக்கிறார்கள்
பகலில் பேசியதைநினைத்து
அம்மா பலசமயம்
தூக்கத்தில் சிரித்திருக்கிறாள்
அவ்ர்கள் பேச்சில்
கம்பனும் காரல்மார்க்சும் இருந்ததில்லை
பாரதியும் ஷெல்லியும் வந்ததில்லை
உலக அரசியல்
வறுமைக்கோடு
பொருளாதார மந்த நிலை
பெண்களுக்கான இடஒதுக்கீடு
இப்படி எதுவுமே இருந்ததில்லை
இன்றைய சமயல்
பாலிய கனவுகள்
புதிதாய் வந்த புடவை
குழந்தை செய்த குறும்பு
கணவன்டம் வாங்கிய திட்டு
நாத்தனாரின் கொடுமைகள்
சீரியல் கதைகள்
இவையே அவர்கள்
பேச்சின் மையம்
இவற்றை பற்றிதான்
பேசுவார்கள்
தினம்தினம் பேசுவார்கள்
தீராமல் பேசுவார்கள்
சத்தமாக சிரிப்பார்கள்
செல்லமாக சணடையிடுவார்கள்
இது போன்ற
பெண்கள் கூட்டம்
அலுவலக நேரத்தில்
உங்கள் வீட்டிலும்
நடக்கலாம்
இயல்பாகவே
பெண்களின் மூளை
அதிகம் பேசும் விதமாக
அமைக்கப்பட்டிருக்கிறது
ஆனால் அது
ஆண்களுக்கு முன்னே
அல்ல
அனுப்பிவிட்டு
என்னை பள்ளிக்கு
தயார் செய்துவிட்டு
சமையல் வேலை
துணிதுவைக்கும் வேலை
இப்படி எல்லா வேலையையும்
முடிக்க அம்மாவுக்கு
பகல் பதினொரு மணியாகும்
மேற்சொன்ன வேலைகளை
முறையே தங்கள் வீட்டில்
முடித்துவிட்டு-எதிர்வீட்டு
சாந்தி சித்தியும்-அடுத்தவீடு
கிருஷ்ணவேணி அத்தையும்
வர பதினொன்றுமுப்பது ஆகும்
பதினொன்று நாற்பத்தைந்துக்கு
ஆரம்பிக்கும் அவர்களது பேச்சு
பல சமயம் இடைவிடாமல்
நான்கு மணிக்கு
நான் வந்தபின் தான்முடிய்ம்
பல சமயம்
அவர்கள் பேசும் ஆர்வத்தில்
சாப்பிட மறந்திருக்கிறார்கள்
பகலில் பேசியதைநினைத்து
அம்மா பலசமயம்
தூக்கத்தில் சிரித்திருக்கிறாள்
அவ்ர்கள் பேச்சில்
கம்பனும் காரல்மார்க்சும் இருந்ததில்லை
பாரதியும் ஷெல்லியும் வந்ததில்லை
உலக அரசியல்
வறுமைக்கோடு
பொருளாதார மந்த நிலை
பெண்களுக்கான இடஒதுக்கீடு
இப்படி எதுவுமே இருந்ததில்லை
இன்றைய சமயல்
பாலிய கனவுகள்
புதிதாய் வந்த புடவை
குழந்தை செய்த குறும்பு
கணவன்டம் வாங்கிய திட்டு
நாத்தனாரின் கொடுமைகள்
சீரியல் கதைகள்
இவையே அவர்கள்
பேச்சின் மையம்
இவற்றை பற்றிதான்
பேசுவார்கள்
தினம்தினம் பேசுவார்கள்
தீராமல் பேசுவார்கள்
சத்தமாக சிரிப்பார்கள்
செல்லமாக சணடையிடுவார்கள்
இது போன்ற
பெண்கள் கூட்டம்
அலுவலக நேரத்தில்
உங்கள் வீட்டிலும்
நடக்கலாம்
இயல்பாகவே
பெண்களின் மூளை
அதிகம் பேசும் விதமாக
அமைக்கப்பட்டிருக்கிறது
ஆனால் அது
ஆண்களுக்கு முன்னே
அல்ல
பேருந்தும் மாற்றமும்
எங்கள்
கிராமத்திற்கு
பேருந்து போவது
அதிசயம்
அது
புதிதாய் இருக்கும்
என்பது மூட நம்பிக்கை
என்
முதல் பேருந்துபயணம்
மூன்று வயதில்
நடந்தேறியது
கூட்ட நெரிசலில்
மூச்சுவிட முடியாமல்
திணறிய நான்
`மாமா மடியில் உக்காந்துக்கோ`
என்று அடையாளம்
தெரியாதவர் மடியில்- அம்மாவால்
அமரவைக்கப்பட்டேன்
அவர் கையில்
பச்சை குத்தப்பட்டிருந்த
வினோதமான படத்தைப்
பார்த்து நான் அழுததும்
என்னை சமாதானப்படுத்தும்
முயற்சியில் அவர் தோற்றதும்
நினைவில் இன்னும் பசுமையாய்
இருக்கிறது.
இருபது வருடங்கள்
ஓடிவிட்டன
அதே கிராமத்திற்கு
அதே ஓட்டைப் பேருந்தில்
அதே கூட்ட நெரிசலில்
பயணித்துக் கொண்டிருந்தேன்
`சார் கொஞ்சம் இடம் கொடுங்கள்`
என்றதும் அந்தபெறியவர்
விலகி உட்கார்ந்தார்
கிட்டதட்ட நான்
அவர் மடியில் அமர்ந்திருந்தேன்
அவர் கையில்
அதே வினோதமான பச்சை
இந்த இருபது வருடம்
எதையுமே மாற்றவில்லை
பழைய கிராமம்
ஓட்டை பேருந்து
கூட்ட நெரிசல்
என்று எதையுமே
மாற்றவில்லை
`மாமாவை` `சார்` ஆக்கியதைத்
தவிர்த்து
Subscribe to:
Comments (Atom)