"ஓய்... ஹின்டு பாத்திங்களா... கடவுளின் துகள கண்டுபிடிச்சிட்டாங்களாம் கானும்.... நான் தான் சொன்னேனே கடவுள் ஒரு பொருள்னு உங்க கருத்துப் படியே.. பொருள யாராலையும் உருவாக்கவும் முடியாது அளிக்கவும் முடியாது ... அந்த பரம்பொருள் தான் நம்ம எல்லாத்தையும் உருவாக்கினது... இப்பவாவது புரிஞ்சுதா ஓய்..." ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட நண்பர் சொன்னார்.
அப்படியா கடவுள் பொருளா?
பார்ப்போம்... பொருள் என்றால் மூன்று விதியின் கீழ் இருக்கும்.. (தலைவிதி இல்லிங்க சாமி... அறிவியல் விதி)
பொருள் என்றால் என்ன? (வாட் இஸ் மேட்டர்?) எட்டாவதில் படித்தது.. ஆங்கில வழிக்கல்வி... மனப்பாடம் பண்ணிய டெபனிசன் மண்டைக்குள் இருக்கிறது.. முடிந்த அளவு தமிழில் சொல்கிறேன்..
1.பொருள் என்பதை நம்மை (மற்ற பொருள்களை) சார்ந்து இருக்காது.. சரியான மொழி மாற்றா என்று தெரியாததால் ஆங்கில டெபனிசனை இங்கே போடுகிறேன்... (எ மேட்டே டஸ்னாட் டிபன்ட் அப் ஆன் சப்ஜக்ட்ஸ்) .. அதாவது ஒரு கல் தேனியில் கிடக்கிறது... நீங்கள் அமேரிக்காவில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் , தேனியில் இருந்தாலும்,இறந்தே போனாலும், அந்த கல் தேனியில் தான் இருக்கிறது. உங்களைச் சார்ந்து இல்லை
2.பொருளை நாம் ஏதாவது ஒரு வகையில் உணரமுடியும்.(வீ கேன் ஃபீல் மேட்டர் பை எனி மீன்ஸ்)
விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
3.பொருள் எதாவது ஒரு கால வெளியில் தான் இருக்கும்.(எ மேட்டர் மஸ்ட் பீ இன் எ டைம் ஸ்பேஸ்) அதாவது ஒரு பொருள் எதாவது ஒரு இடத்தை நிரப்பித் தான் இருக்க முடியும். உங்க செல்போன் உங்கள் கையிலோ.. பையிலோ.. தரையிலேயோ.. மேஜையிலேயோ எதேனும் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும்.. இடம் இல்லாமல் உங்க செல்போன் இருக்க முடியாது.. (வெளி தான் புரிவதற்காக இடம் என்று சுட்டப்படுகிறது). அதே போல் குறிப்பிட்ட காலத்துக்குத் தான் அது செல் போன்.. உங்கள் போனை வைத்துவிட்டு ஆயிரம் வருடம் வந்து பார்த்தால் அது அரித்துப் போய் தூசியாகிவிடும்.
இது மூன்றையும் கடவுள் சேட்டிஸ்ஃபை பண்ணிகிறாரா? என்ன சொல்கிறார் , நம் முதல் பத்தி ஆசாமி..
1."கடவுள் யாரையும் டிபென்ட் பண்ணி இல்ல... நாம தான் லார்ட டிபென்ட் பண்ணி இருக்கோம்"
2."தியானத்தால கடவுள உணரமுடியும்னு பெரியவா எல்லாம் சொல்லிருக்காலோ இல்லியோ... இந்த ரோட்டுல வந்து சாமி ஆடுறாலே அது எல்லாம் கடவுளை உணராமலா ஆடுவா.."
3." 'காடு'க்கான கால வெளி எல்லாம் நாம பாக்க முடியாது கானும்... அவாளுக்கு தேவலோகம்னு ஒன்னு இருக்கு... அங்க இருந்து எல்லாத்தையும் கவனிச்சுப்பா... அங்க ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருஷம்னு எம்பாட்டி சொல்லுவா..."
1.எனக்கென்னமோ கடவுள் மனுசங்கள மட்டும் தான் டிபென்ட் பண்ணி இருக்கிற மாதிரி தெரியுது.. மனுசன் வாரதுக்கு முன்னாடி இருந்த எந்த உயிரினமும் இப்ப மனுசனத் தவிர இருக்கிற உயிரினமும் கடவுளைக் கும்பிடுவது இல்லியே.... "நமக்கு மட்டும் தானேடா ஆறாம் அறிவு இருக்கு" அப்படின்னு சாமி சொல்வார்.. ஆறாம் அறிவு மட்டும் தான் இருக்கு மத்த அஞ்சும் எங்க போச்சோ.... சரி... சாமி சொல்ற மாதிரி வச்சுப்போம்.
2.தியானம் பண்ணி கடவுள உணர்ந்தவங்க மேல எல்லாம் கேஸ் நடக்குது... அத விடுங்க ... இந்த ரோட்டுல ஆடுறவங்க எல்லாம் ஒரு வகையான மன நோய்க்கு ஆட்பட்டவங்கனு படிச்ச டாக்டருங்க சொல்றாங்க.... அதுக்குள்ள போக விரும்பல
3.கடவுள் என்கிற பொருள் கால வெளியில இருக்குன்னா... நாம முன்னமே பார்த்த மாதிரி பொருள் இருக்கனும்னா அதுக்க்கு முன்னாடியே கால வெளி இருக்கனும் கால வெளி இருக்கனும்..... கடவுள் தான் எல்லாம் படைச்சார் அப்படின்னு சொல்றப்போ.. அவருக்கு முன்னாடி கால வெளிய படைச்சது யாரு....?
எல்லாத்தையும் இன்னும் தெளிவா அறிவியல் பூர்வமா உடைச்சா நேரம் ஆகும்....
ஆக மொத்தத்தில்
கடவுள் பொருள் இல்லை